Headlines

தேசிய மக்கள் சக்தியுடன் டீலுக்கு செல்வோர் துரோகிகள்

தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் டீல் பேசி ஆட்சி அமைப்போர் தமிழின துரோகிகள் என யாழ் . மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி, மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.  யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  தமிழர் பிரதேசங்களின் சில இடங்களில் தேசிய மக்கள் சக்தியும் கணிசமான ஆசனங்களையும் பெற்றுள்ளார்கள். அவர்களுடன் தமிழ் தேசிய கட்சிகள் கூட்டிணைந்து ஆட்சி அமைக்க கூடாது.  தேசிய மக்கள்…

Read More

குட் பேட் அக்லி.. மொத்த வசூல் விவரம் இதோ

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை படைத்தது. மேலும் திரையரங்கை தொடர்ந்து தற்போது OTT-யிலும் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், குட் பேட்…

Read More

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் : சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். நடப்பு தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளை ஒருவாரத்திற்கு மட்டும் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.பி.எல்.போட்டி நடத்தினால் குண்டு வெடிக்கும் என எச்சரித்து டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் விரைந்து…

Read More