Headlines

குறைவடைந்துள்ள தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்தநிலையில், தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (08) குறைவடைந்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 983,946 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.  இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,710 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 277,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல் 22…

Read More

12 பேருடன் பயணித்த பெல் 212 ரக உலங்கு வானூர்தி விபத்து – 6 பேர் பலி

இன்று காலை உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கிய நிலையில் அதிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயுதம் தரித்த 2 விமானப்படை வீரர்கள் மற்றும் 3 சிறப்பு படை வீரர்கள் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட பெல் 212 ரக உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. உலங்கு வானூர்தி மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார். விமானத்தில்…

Read More

சுவிட்சர்லாந்தில் இமையாணன் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !

 வடமராட்சி இமையாணன் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார் சுவிட்சர்லாந்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் அண்மைகாலமாக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ,  இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் , இமையாணன் பகுதியைச் சேர்ந்த தங்கராசா ஈஸ்வரன் வயது 49 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

Read More

யாழ் . மாநகரத்திற்கு விலை போகாதவரே முதல்வராக வரவேண்டும்

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக வர கூடியவர் விலை போகாதவராக தமிழ் தேசிய பற்றுடன் செயற்பட கூடியவராக இருக்க வேண்டுமாம் என யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்  யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  மேலும் தெரிவிக்கையில்,  யாழ் . மாநகர சபை முதல்வர் பதவி என்பது மிக முக்கியமானது.  ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட…

Read More

தேசிய மக்கள் சக்தியுடன் டீலுக்கு செல்வோர் துரோகிகள்

தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் டீல் பேசி ஆட்சி அமைப்போர் தமிழின துரோகிகள் என யாழ் . மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி, மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.  யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  தமிழர் பிரதேசங்களின் சில இடங்களில் தேசிய மக்கள் சக்தியும் கணிசமான ஆசனங்களையும் பெற்றுள்ளார்கள். அவர்களுடன் தமிழ் தேசிய கட்சிகள் கூட்டிணைந்து ஆட்சி அமைக்க கூடாது.  தேசிய மக்கள்…

Read More

நாடாளுமன்றில் இருந்து வெளியேற்றப்பட்ட அருச்சுனா எம். பி

சபை முதல்வர் பிமல் ரத்னாயக்கவின் உரைக்கு தொடர்ச்சியாக இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  சபை அமர்வுகளை குழப்பும் வகையில் குழப்பம் விளைவித்ததை அடுத்தே சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

Read More