ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் – வளைகுடா நாடுகள்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரு நாடுகளின் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி உயிரிழந்ததையடுத்து, மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. 

இந்நிலையில் ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று வளைகுடா நாடுகள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி, ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

எங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை. இதற்கு முற்றிப்புள்ள வைக்க ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *