ஈ​ரானின் அடுத்த தலை​வர் யார்?

ஈ​ரானில் உயர் தலை​வர் அயத்​துல்லா அலி கொமெய்னி கொல்​லப்​பட்​ட​தால், அடுத்த தலை​வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரானின் அதி​கபட்ச அதி​காரம் வைத்​திருந்த மதத் தலை​வ​ர் கொமெய்னி கொல்லப்பட்டார். இதனால் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. தனக்​குப் பின்​னர் இவர்​தான் வாரிசு என்று கொமெய்னி பகிரங்​க​மாக யாரை​யும் அறிவிக்​க​வில்​லை.

ஆனால், அவருடைய 2-வது மகன் மோஜ்தபா கொமெய்னிதான் அடுத்த தலை​வ​ராக வரு​வார் என்று கூறப்​படு​கிறது. 56 வயதாகும் மோஜ்தபா தனது தந்தை கொமெய்னியிடம் அரசி​யல் கற்​றவர் என்று கூறப்​படு​கின்றது.

எனினும் எதிர் தரப்​பைச் சேர்ந்த 2 பேர் ஈரானில் ஆட்​சி​யைப் பிடிக்க முயற்​சித்து வரு​கின்​றனர். முக்​கிய எதிர்க்​கட்​சித் தலை​வர் மர்​யம் ரஜாவி மற்​றும் அமெரிக்​கா​வில் தஞ்​சம் அடைந்​துள்ள ஈரானின் பட்​டத்து இளவரசர் ரெசா பஹ்லவி ஆகியோர் அதி​காரத்​தைக் கைப்​பற்ற நினைக்​கின்​றனர்.

அமெரிக்க தாக்​குதலில் கொமெய்னி கொல்​லப்​பட்ட பிறகு, இவர்​கள் இரு​வரும் விடுத்த செய்​தி​யில், “ஈரான் மக்​கள் ஒற்​றுமை​யாக இருக்க வேண்​டும்” என்று கூறியுள்​ளனர். அத்​துடன் ஈரானில் இஸ்​லாமிய குடியரசுக்​கான எதிர்​கால திட்​டங்​கள் குறித்து இரு​வரும் விளக்​க​மாக எடுத்​துரைத்​துள்​ளனர்.

மர்யம் ரஜாவி வெளி​யிட்ட செய்​தி​யில், “ஈரானிய மக்​களே! மதகுரு ஆட்​சி​யைத் தூக்கி எறி​யுங்​கள். ஜனநாயகக் குடியரசு ஆட்​சியை ஏற்​படுத்​துங்​கள்” என்று அழைப்பு விடுத்​துள்​ளார்.

இத்துடன், “இஸ்​லாமிய ஆட்சி சிதைந்​தால், அதற்கு மாற்​றான ஜனநாயக ஆட்சி மாற்​றத்​துக்கு என்​னிடம் திட்​டங்​கள் உள்​ளன. என ஈரான் கடைசி மன்​னரின் மகன் ரெசா பஹ்ல​வி, தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் பதி​வொன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்​கா​வின் நடவடிக்கை ஈரான் மக்​களுக்கு எதி​ரானது அல்ல. அது மனி​தாபி​மான தலை​​யீடு” என்று கூறி​யுள்​ளார். இவர்​கள் தவிர ஈரானில் இஸ்​லாமிய புரட்​சிக்கு வழி​வகுத்த ருஹோல்லா கொமேனி​யின் பேரன் ஹசன் கொமெய்னியும் (53) ஆட்சி அதி​காரத்​தைக் கைப்​பற்ற நினைக்​கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *