ஈரான் இராணுவம், புரட்சிகர பொலிஸ்படை, பொலிஸார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டுத் தலைவர்கள் 48 பேர் கொல்லப்பட்டனர். ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார். ஈரான் இராணுவம், புரட்சிகர பொலிஸ்டை, பொலிஸார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும். இல்லையென்றால் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும். உலகின் மிகப்பெரிய தீவிரவாத நாடு ஈரான். ஈரான் மக்களுடன் அமெரிக்கா உள்ளது. நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன், அந்த வாக்குறுதியை நிறைவேற்றினேன். ஈரானின் இராணுவத் தலைமை முழுவதுமாக ஒழிந்துவிட்டது. என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஈரான் மக்கள் கொமெய்னி உயிரிழப்பை கொண்டாடினர். இந்த நடவடிக்கைகள் சரியானவை. அமெரிக்கர்கள் அணு ஆயுதங்கள் மற்றும் இரத்தவெறி கொண்ட பயங்கரவாத ஆட்சியை ஒருபோதும் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
50 ஆண்டுகளாக, இந்த பயங்கரவாதிகள் ‘அமெரிக்காவிற்கு மரணம்’ அல்லது ‘இஸ்ரேலுக்கு மரணம்’ என்ற கோஷங்களை எழுப்பி அமெரிக்காவைத் தாக்கி வருகின்றனர். இந்த சகிக்க முடியாத அச்சுறுத்தல்கள் இனி தொடராது. சுதந்திரத்திற்காக ஏங்கும் அனைத்து ஈரான் மக்களும் இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தைரியமாக, வீரமாக, உங்கள் நாட்டைத் திரும்பப் பெற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். கடந்த 36 மணி நேரமாக, அமெரிக்காவும் எங்கள் கூட்டளாளியும் இணைந்து ஈரான் வான் பாதுகாப்பு அமைப்புகள் உட்பட நூற்றுக்கணக்கான இலக்குகளை தாக்கியுள்ளோம்.
இப்போதுதான், ஒன்பது கப்பல்கள் மற்றும் அவற்றின் கடற்படைக் கட்டடத்தை நாங்கள் தகர்த்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஈரானின் முழு இராணுவத் தலைமையும் போய்விட்டது. அவர்களில் பலர் தங்கள் உயிரைக் காப்பாற்ற சரணடைய விரும்புகிறார்கள்.
இந்த நேரத்தில் போர் நடவடிக்கைகள் தொடர்கின்றன. அவை நமது இலக்குகள் அடையப்படும் வரை தொடரும். அமெரிக்கா இப்போது மீண்டும் உலகின் பணக்கார, மிகவும் சக்திவாய்ந்த நாடாக உள்ளது. நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரான் ஆட்சி ஒவ்வொரு அமெரிக்கருக்கும் கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும்.
பயங்கரவாதப் படைகளை வளர்க்கும் ஒரு நாடு அத்தகைய ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க முடியாது, இது உலகை அவர்களின் தீய விருப்பத்திற்கு அடிமையாக்க அனுமதிக்கும். நாங்கள் அதை நடக்க விடப் போவதில்லை. என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

