‘பொடி பெட்டி’யை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லொகு பெட்டியின் சகோதரர் பொடி பெட்டியை இலக்கு வைத்து அஹுங்கல்ல பகுதியில் நேற்று (16) இரவு 11.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பும்போதே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதில் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *