அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று (09) காலை 8 மணி முதல் 48 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
படிப்பின் பின்னரான வரையறுக்கப்பட்ட சேவை வைத்தியர்களின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

