பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே செனதீர தெரிவித்துள்ளார்.
நேற்று (08) கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் சிறிய விபத்து ஏற்பட்டால் கூட குறித்த சாரதிகள் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

