இலங்கை மத்திய வங்கி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தவணைகள் மற்றும் வட்டி விகிதங்களை 2028 முதல் செலுத்த இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் அவற்றை எந்த தடையும் இல்லாமல் திருப்பிச் செலுத்துவதற்கு உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார். 2028 முதல் இலங்கை ஆண்டுதோறும் மூன்றரை முதல் நான்கு (3.5) பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கடன்கள் மற்றும் தவணைகளை செலுத்த வேண்டியுள்ளது. 2028 முதல் 2031…

Read More

இலங்கை சார்ந்த விடயங்கள் நோர்வே பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம் முன்வைத்துள்ள பிரேரணைக்கு அமைய இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.  இதன்போது தொடரப்படும் கேள்விகளுக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதில் வழங்கவுள்ளார். இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்பார்ப்புகளை மையமாகக் கொண்டு அமையவுள்ள இந்த விவாதத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றங்கள், நல்லாட்சிக்கான நகர்வுகள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான…

Read More

இலங்கை – பாகிஸ்தான் இடையிலான விளையாட்டு இராஜதந்திர உறவுகள் பலப்படுத்தல்

2026 ரி20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் மத்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான சையத் மொஹ்சின் ரசா நக்வி தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரக் குழுவினர், இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதனும் கலந்துகொண்டார். இலங்கையில் நடைபெற்ற தீர்மானமிக்க இந்தியா –…

Read More

பங்களாதேஷில் இன்று புதிய பிரதமர் பதவியேற்பு

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) ஆட்சி அமைக்கவுள்ளது. குறித்த தேர்தலில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுமான தாரிக் ரகுமான் இன்று (17) மாலை 4 மணிக்கு தலைநகர் டாக்காவில் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார். பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தாரிக் ரகுமானுக்கு, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது சகாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

இந்திய  பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘செயற்கை  நுண்ணறிவு  தாக்கம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். மாநாட்டினை தொடர்ந்து  இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலக நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது….

Read More

இலங்கையை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவப் பணிப்பாளர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட விஷேட பிரதிநிதிகள் குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (16) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்தனர். தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதிநிதிகள் குழுவை வரவேற்றார். டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களையும் அதன் தாக்கத்தையும் நேரடியாகப் பார்வையிடும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப்…

Read More

பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் வருகை இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துகின்றன- ஜனாதிபதி

பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் வருகை மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் இலங்கை வருகை என்பன இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் Syed Mohsin Raza Naqvi, வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் மற்றும் மனிதவள அபிவிருத்திக்கான அமைச்சர் chaudhry Salik Hussain ஆகியோர் உள்ளிட்ட தூதுக்குழுவுடனான சந்திப்பு இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…

Read More

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக, நீர்கொழும்பு களப்புப் பகுதியை அபிவிருத்தி செய்யும் புதிய திட்டமொன்று நாளை (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் புதிய படகு இறங்குதுறை மற்றும் படகு செலுத்தும் தளம் என்பன அமைக்கப்படவுள்ளன. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  பிரதி அமைச்சர் ரத்ன கமகே…

Read More