பங்களாதேஷில் இன்று புதிய பிரதமர் பதவியேற்பு

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) ஆட்சி அமைக்கவுள்ளது.

குறித்த தேர்தலில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுமான தாரிக் ரகுமான் இன்று (17) மாலை 4 மணிக்கு தலைநகர் டாக்காவில் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தாரிக் ரகுமானுக்கு, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது சகாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *