CTEditor

பூமிக்கு வரும் ஏலியன்கள்?

நமது பூமிக்கு வெளியே உள்ள பிற கோள்களில் உயிரினங்கள் உள்ளனவா? ‘ஏலியன்கள்’ உண்மையிலேயே இருக்கிறார்களா? என்ற கேள்வி பல தசாப்தங்களாக மனித குலத்தை ஆச்சரியப்படுத்தி வருகிறது. ஆனால் இதுவரை வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான உறுதியான, அறிவியல் ரீதியான ஆதாரம் எதுவும் இல்லை என்பது விஞ்ஞானிகளின் நிலைப்பாடாகும். சமீபத்தில் சூரிய குடும்பத்திற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் ‘3I/ATLAS’ என்ற விண்வெளி பொருள் குறித்து சில சமூக வலைதளங்களில் பரபரப்பு எழுந்துள்ளது. இது ஒரு சாதாரண இட்நட்சத்திர (interstellar) விண்கல் தானா? அல்லது…

Read More

இலங்கை கிரிக்கெட் அணியை கட்டி எழுப்புவது கடினம் – முரளிதரன்

“உண்மையை உணருங்கள், உலகில் நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம்”  இலங்கை அணி T20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்திற்கு எதிரான முக்கியமான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. T20 உலகக் கோப்பையில் இலங்கை அணி வெற்றியின் தொடக்கத்தை எடுத்திருந்தாலும், அந்த வெற்றியின் தாளத்தை தக்கவைக்க அணி தவறியது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்களில், ரசிகர்கள் தங்கள் கோபத்தையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்துவதைக் காணலாம். இத்தகைய சூடான…

Read More

இலங்கை – பாகிஸ்தான் இடையிலான விளையாட்டு இராஜதந்திர உறவுகள் பலப்படுத்தல்

2026 ரி20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் மத்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான சையத் மொஹ்சின் ரசா நக்வி தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரக் குழுவினர், இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதனும் கலந்துகொண்டார். இலங்கையில் நடைபெற்ற தீர்மானமிக்க இந்தியா –…

Read More

தயாசிறி எம்.பியின் கட்சி உறுப்பினர் பதவி இடைநிறுத்தம் – நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு

தயாசிறி ஜயசேகர எம்.பியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்துவதற்கான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைகால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்த முறைப்பாடை ஆராய்ந்த பின்னரே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்சியின் பொதுச் செயலாளராக அவர் செயல்படுவதில் தலையிடுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை .

Read More

பங்களாதேஷில் இன்று புதிய பிரதமர் பதவியேற்பு

பங்களாதேஷ் பொதுத்தேர்தலில் பெரும்பான்மையை பெற்றுள்ள பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) ஆட்சி அமைக்கவுள்ளது. குறித்த தேர்தலில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுமான தாரிக் ரகுமான் இன்று (17) மாலை 4 மணிக்கு தலைநகர் டாக்காவில் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார். பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தாரிக் ரகுமானுக்கு, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது சகாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய பிரதமர் மோடி விரைவில் இஸ்ரேலுக்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தின் முதல் பயணமாக வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இஸ்ரேலுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சுமார்  09 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம்  அமைகிறது. இருவரும் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய…

Read More

செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

இந்திய  பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘செயற்கை  நுண்ணறிவு  தாக்கம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். மாநாட்டினை தொடர்ந்து  இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலக நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது….

Read More

கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

ஹிக்கடுவை – நாரிகம கடலில் நீராடச்சென்ற மூன்றுபேர் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.  நேற்று திங்கட்கிழமை (16) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்டவர்கள் 37 வயதுடைய பெண் ஒருவரும், 50 மற்றும் 18 வயதுடைய ரஷ்ய மற்றும் ஜெர்மன் நாட்டவர்களும் ஆவர். இதேவேளை, ஹிக்கடுவை பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள கடலில் நீராடச்சென்ற பெண் ஒருவர் நீரோட்டத்தில் சிக்குண்டு கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (16) இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார்…

Read More

யாழில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு – இருவர் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய், அல்லியாவத்தை பகுதியில் நேற்று (16) மாலை மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இக் கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 59 வயதான நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஆவார். காணித்தகறாறினால் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  

Read More

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஹொக்கி விளையாட்டின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 உயிரிழந்துள்ளர். அமெரிக்காவின் ரோட் தீவு மாநிலத்தில் இளைஞர்கள் ஹொக்கி விளையாடின்போது மர்மநபரொருவரால் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் சந்தேக நபர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மற்றும் உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

Read More