இஸ்ரேலும் லெபனானும் மீண்டும் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌயிட்டுள்ளன.
நேற்று (14) வொஷிங்டனின் டி.சி.யில் இடம்பெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக லெபனானும் இஸ்ரேலும் தங்களின் முதல் தூதரக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
இதற்கு மத்தியஸ்தம் வகித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஹிஸ்புல்லாவின் செல்வாக்கை முடிவுக்குக் கொண்டுவர இதுவொரு வரலாற்று வாய்ப்பு எனக் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை இடம்பெறுவதற்கான இடமும் நேரமும் பின்ன் தீர்மானிக்கப்படும் நிலையில், அனைத்து அரசு சாரா பயங்கரவாதக் குழுக்களையும் நிராயுதபாணியாக்க விரும்புவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

