இந்தோனேசியாவின் பெகாசி மாகாணம், முஸ்திகஜயாவில் உள்ள சிமுனிங் என்ற இடத்தில், எல்பிஜி கிடங்கு என சந்தேகிக்கப்படும் இடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ பரவியதால் வெடிப்புகள் ஏற்பட்டதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், மின்சாரத் தடை மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் நிலவியது.
தீயணைப்புப் படையினர் இன்னும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

