நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் துறை காரியாலயத்திற்கு அருகில் இன்று (01) மாலை லொறி ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த லொறி நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான குப்பை அகற்றும் லொறி ஒன்று என தெரியவந்துள்ளது.
இதன் போது படுகாயமடைந்த லொறியின் சாரதியும் நடத்துனர் இருவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக வீட்டு மதில் சுவர் மற்றும் வீட்டிற்கும் சேதமேற்பட்டுள்ளதுடன் லொறியின் முன்பகுதியும் கடுமையாக சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பாக நுவரெலியா போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,

