Category: விளையாட்டு
ஜோன்ஸ் சட்டத்தை தளர்த்த ட்ரம்ப் தீர்மானம்
அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையே சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டதாகவும், அமெரிக்கக் கொடியுடன், அந்நாட்டு ஊழியர்களால் இயக்கப்படுபவையாகவும் இருக்க வேண்டும் என்ற ஜோன்ஸ் சட்டத்தை தற்காலிகமாக தளர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். இந்தச் சட்டத்தை 30 நாட்களுக்கு தளர்த்துவதன் மூலம், வெளிநாட்டு கொடி ஏந்திய எரிபொருள் தாங்கி கப்பல்கள் அமெரிக்காவின் வளைகுடாப் பகுதியில் இருந்து கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஈரான் போர் காரணமாக…
புதிய ஜெர்சியை வெளியிட்ட சென்னை அணி
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் ஐ.பி.எல் தொடருக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஜெர்சியை அணிந்த வண்ணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மகேந்திர சிங் தோனி பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தியோகபூர்வ பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஐ.பி.எல் 2026 தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியும் பயிற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. வீரர்கள் முகாமில் தீவிர பயிற்சிகளை…
இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு லசித் மாலிங்க வெளியிட்டுள்ள முக்கிய பதிவு
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளரும் தற்போதைய அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளருமான லசித் மாலிங்க விசேட முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டில் இலங்கை அணி முதன்முதலில் உலகக் கிண்ணமொன்றை வென்றதன் முதல் சுற்றில் வெளியேறியதுடன் நான்கு உலகக் கிண்ண போட்டிகளில் இறுதி வரை முன்னேறி தோல்வியைத் தழுவியதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனது தாய் நாட்டு அணி…
இலங்கை கிரிக்கெட் அணியை கட்டி எழுப்புவது கடினம் – முரளிதரன்
“உண்மையை உணருங்கள், உலகில் நாம் மிகவும் பலவீனமாக இருக்கிறோம்” இலங்கை அணி T20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்திற்கு எதிரான முக்கியமான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது. T20 உலகக் கோப்பையில் இலங்கை அணி வெற்றியின் தொடக்கத்தை எடுத்திருந்தாலும், அந்த வெற்றியின் தாளத்தை தக்கவைக்க அணி தவறியது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்களில், ரசிகர்கள் தங்கள் கோபத்தையும் விமர்சனத்தையும் வெளிப்படுத்துவதைக் காணலாம். இத்தகைய சூடான…
அரசாங்கத்தின் தலையீட்டை தசுன் சானக கோரியுள்ளார்
இலங்கைத் தேசிய கிரிக்கெட் அணியைச் சுற்றி நிலவும் எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளத் தாக்குதல்கள், வீரர்களின் மனநலத்தையும் விளையாட்டின் எதிர்காலத்தையும் பாதிப்பதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக தெரிவித்துள்ளார். இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியதைத் தொடர்ந்து கருத்துத் வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தோல்விக்கான பொறுப்பை அணி ஏற்றுக்கொண்டாலும், வெளியிலிருந்து வரும் தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்கள் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ள…
இலங்கை – பாகிஸ்தான் இடையிலான விளையாட்டு இராஜதந்திர உறவுகள் பலப்படுத்தல்
2026 ரி20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் மத்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான சையத் மொஹ்சின் ரசா நக்வி தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரக் குழுவினர், இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதனும் கலந்துகொண்டார். இலங்கையில் நடைபெற்ற தீர்மானமிக்க இந்தியா –…
அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை
2026 T 20 உலகக்கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி இன்று பல்லேகல சர்வதேச மைதானத்தில் (16) இரவு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது. இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீரமானித்தது. இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான அரைசதம் அடித்து அசத்தினர் அதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு…

