2026 T 20 உலகக்கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி இன்று பல்லேகல சர்வதேச மைதானத்தில் (16) இரவு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது.
இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீரமானித்தது.
இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான அரைசதம் அடித்து அசத்தினர்
அதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு 182 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது அவுஸ்திரேலியா.
இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணியின் முதல் ஜோடியாக பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசால் ஜனித் களமிறங்கினர்.
இதில் குசால் ஜனித் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் குசால் மெண்டிஸ் பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி அரை சதம் விளாசினர். பெதும் நிஸ்ஸங்க சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களை பெற்றார். இது இத்தொடரின் முதலாவது சதமாகும்.
இந்த தொடரில் குசால் மெண்டிஸ் 3 அரை சதங்களை விளாசியிருந்தமை குறிப்பிடத்தகது
அதன் படி 2 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது இலங்கை.


