ஜோன்ஸ் சட்டத்தை தளர்த்த ட்ரம்ப் தீர்மானம்

அமெரிக்க துறைமுகங்களுக்கு இடையே சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டதாகவும், அமெரிக்கக் கொடியுடன், அந்நாட்டு ஊழியர்களால் இயக்கப்படுபவையாகவும் இருக்க வேண்டும் என்ற ஜோன்ஸ் சட்டத்தை தற்காலிகமாக தளர்த்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

இந்தச் சட்டத்தை 30 நாட்களுக்கு தளர்த்துவதன் மூலம், வெளிநாட்டு கொடி ஏந்திய எரிபொருள் தாங்கி கப்பல்கள் அமெரிக்காவின் வளைகுடாப் பகுதியில் இருந்து கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஈரான் போர் காரணமாக மசகு எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலை என்பன வேகமாக உயர்ந்துள்ளன.

இதனை தடுக்க டொனால்ட் ட்ரம்ப் எடுத்துள்ள ஒரு முக்கியமான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

அமெரிக்காவின் உத்தியோகபூர்வ பெட்ரோலிய இருப்பிலிருந்து 172 மில்லியன் பீப்பாய்; மசகு எண்ணெயைச் சந்தைக்கு வெளியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏனைய நாடுகளுடன் இணைந்து உலகச் சந்தைக்கு ஒட்டுமொத்தமாக 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *