அமெரிக்க கடற்படை செயலாளர் விலகல்

அமெரிக்க கடற்படை செயலாளர் ஜோன் ஃபெலன், விலகுவதாக பென்டகன் அறிவித்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் பதவி விலக்கப்பட்டுள்ளதாக பென்டகனின் செய்தித் தொடர்பாளரான சோன் பார்னெல் தெரிவித்துள்ளார்.

கடற்படை துணைச் செயலாளர் ஹங் காவோ தற்காலிக செயலாளராகப் பணியாற்றுவார் என்று அவர் கூறியுள்ளார்.

ஈரானுடனான அமெரிக்க – இஸ்ரேல் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியான முற்றுகைக்கு மத்தியில் அவரது பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க கடற்படை செயலாளர் ஜோன் ஃபெலனின் விலகலுக்கான காரணத்தை கடற்படை தெரிவிக்கவில்லை.

மேலும் இரண்டு இராணுவ அதிகாரிகளான ஜெனரல் டேவிட் ஹோட்னே மற்றும் மேஜர் ஜெனரல் வில்லியம் கிரீன் ஆகியோர் அண்மையில் பதவி விலக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *