10 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஈராக் – சிரியா எல்லை

ஒரு தசாப்தத்திற்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையிலான பிரதான எல்லைக் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது மத்திய கிழக்கின் வர்த்தக மற்றும் எரிசக்தி போக்குவரத்தில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

ஈரான் தொடர்பான போர் பதற்றங்களால் தற்போது மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ள ஹோர்முஸ் நீரினைக்கு மாற்றாக இந்த நிலவழிப் பாதையைப் பயன்படுத்த முடியும் என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. கடல்வழிப் போக்குவரத்தில் சிக்கல்கள் ஏற்படும் போது, இந்த எல்லைப் பாதை ஒரு பாதுகாப்பான மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், நிலவழியாக எண்ணெயைக் கொண்டு செல்வது என்பது கடல்வழி மற்றும் குழாய் வழி மூலமான போக்குவரத்தை விட மிகக் குறைந்த செயல்திறன் கொண்டது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படும் எண்ணெயின் அளவோடு ஒப்பிடுகையில், நிலவழிப் போக்குவரத்து செலவு மற்றும் நேரம் அதிகமாக எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில் உரையாற்றிய ஈராக்கின் நினிவே மாகாண சபை உறுப்பினர் நாதியா அல்-ஜுபோரி கூறியதாவது:

“இந்த எல்லைப் பாதையின் திறப்பு, வர்த்தகப் பரிமாற்றம் மற்றும் எண்ணெய் போக்குவரத்திற்கான ஒரு பிரம்மாண்டமான கதவைத் திறந்துவிட்டுள்ளது. இது இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் வலுசேர்க்கும்.” என் தெரிவித்தார்

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் உள்நாட்டுப் போர்கள் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த எல்லைப் பகுதி மூடப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *