நேபாளத்தில் விமான பயண கட்டணங்கள் சடுதியாக உயர்வு

நேபாள அரசாங்கம் விமான எரிபொருள் விலையை இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலையால் ஏற்படக்கூடிய எரிபொருள் விநியோகத் தடைகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த நாட்டின் விமான பயண கட்டணங்கள் சடுதியாக உயர்ந்துள்ளன.

இதன்படி காத்மாண்டுவிலிருந்து இயங்கும் சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை 84.7 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் பொக்காரா மற்றும் பைரவா ஆகிய இடங்களிலிருந்து இயங்கும் விமானங்களுக்கான எரிபொருள் விலை முறையே 116.2மூ மற்றும் 117.4மூ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமானங்களுக்கான எரிபொருள் விலை 97.6 சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளதாக நேபாளத்தின் அரச எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைகளைச் செலுத்துவதற்காக இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் விளைவாகஇ நேபாளத்தின் உள்நாட்டு விமான கட்டணங்கள் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அந்தநாட்டின் சிவில் விமான ; போக்குவரத்து அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *