மீன்பிடிப் படகிலிருந்து 300 கிலோ ஹெரோயின் பறிமுதல்

பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் பலநாள் மீன்பிடிப் படகிலிருந்த 300 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (01) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த படகானது திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது படகிலிருந்த 298 உரப் பைகளில் இப் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

படகும் அதிலிருந்த 6 சந்தேக நபர்களும் தொடர்பாடல் உபகரணங்களும் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப் போதைப்பொருளானது, சுமார் 6000 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *