கடந்த 08 நாட்களில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. 

குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.  அதேவேளை, நீரில் மூழ்கிய சம்பவங்களினால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதிகளவிலான விபத்து மரணங்கள் ஏப்ரல் 10 மற்றும் 13 ஆகிய திகதிகளில் பதிவாகியுள்ளன. 

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருட புத்தாண்டு காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *