யாழ்ப்பாண மாணவன் பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார் 

சுன்னாகம் பகுதியை சேர்ந்த மொரட்டுவா பல்கலைக்கழக மாணவன் , சக மாணவர்களுடன் , பெந்தோட்டை பகுதிக்கு சுற்றுலா சென்று கடலில் நீராடிய வேளை கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார் 

கடலில் மூழ்கி காணாமல் போன மாணவனை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற போதிலும் , மாணவன் உயிரிழந்த நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார். 

சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *