பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகராக கலாநிதி நய்யார் நசீர் நியமனம்

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கலாநிதி நய்யார் நசீர் [Major General (Retd) Dr Nayyar Naseer, HI (M)] நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ விழாவின் போது ஜனாதிபதியிடம் தனது நியமனக் கடிதத்தை கையளித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட உயர்ஸ்தானிகர் நய்யார் நசீர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால சகோதரத்துவ உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கும் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் கலாசாரப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் பாகிஸ்தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பாரசீக மொழியில் டிப்ளோமா பெற்றுள்ள அவர், இரண்டு முதுகலைப் பட்டங்களையும், அத்துடன் ‘ஆளுமை மற்றும் பொதுக் கொள்கை’ (Governance and Public Policy) துறையில் எம்.பில் (MPhil) மற்றும் கலாநிதி (PhD) பட்டங்களையும் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *