ஈரான் மீதான இராணுவத் தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீடிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானியத் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருமித்த முன்மொழிவை முன்வைக்கும் வரை காத்திருக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது
பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதியின் வேண்டுகோளை ஏற்று, ஈரான் ஒருமித்த கருத்துக்கு வரும் வரை எங்களது தாக்குதலை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
இருப்பினும், தெஹ்ரான் துறைமுகங்கள் மீதான இராணுவ முற்றுகை தொடரும்.
ஈரான் தனது தரப்பு முன்மொழிவை சமர்ப்பித்து, அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவுக்கு வரும் வரை போர்நிறுத்தம் அமுலில் இருக்கும்
அதேசமயம், அமெரிக்க இராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்

