ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்கமைய, லாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்றைய தினம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
இதன்போது, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

