அனுராதபுரம் – இப்பலோகமவில் மின்னல் தாக்கியதில் இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (27) பிற்பகல் பலத்த மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன.
தமது விவசாய நிலங்களில் நிலத்தை தயார்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விஜிதபுர பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

