மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போரை நிறைவுறுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடமே வினவ வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் ஆட்சிக்கு கொண்டு வர ஜூலி சங் பாடுபட்டதால், போர் எப்போது முடியும் என்பதை அவரிடமே வினவ வேண்டும்
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பைக காரணம் காட்டி, உள்நாட்டில் விலையை அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
இதன் மூலம் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இது ஏனைய பொருட்களின் விலையேற்றத்திற்கும் தாக்கம் செலுத்தும்
எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், விலை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னதாக கூறியிருந்தார்.
ஆனால், தற்போது மண்ணெண்ணெய் உட்பட எரிபொருள் விலைகளை அரசாங்கம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

