சிசு செரிய சேவையை விரிவுப்படுத்த திட்டம்

இந்த ஆண்டு சிசு செரிய சேவையில் புதிதாக 200க்கும் மேற்பட்ட பேருந்துகளை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இசுருபாய வளாகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை சிறுவர்களின் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சுகள் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய இந்த ஆண்டு சுமார் ஒரு பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிசு செரிய சேவையை நாடு தழுவிய ரீதியில் விரிவுபடுத்த, தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சிறிய ரக வாகன உரிமையாளர்களை இந்தத் திட்டத்தில் இணையுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

போக்குவரத்து வசதி தேவைப்படும் மாணவர்கள், தங்கள் பாடசாலை அதிபர் ஊடாக அருகிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை அலுவலகத்திற்கு அறிவிப்பதன் மூலம் இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *