டிட்வா தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் பெறப்பட்டன

டிட்வா சூறாவளியின் அரசின் தொடர் நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறும் நிகழ்வு நுவரெலியா நகரின் மையப்பகுதியில் இன்று நடைபெற்றது.

சூழலியல் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக, டிட்வா மீளாய்வு என்ற தலைப்பின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது,

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்று, ஒரு திட்டத்தைத் தயாரித்து இதில் இயற்கை அனர்த்தம் காரணமாக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து அதற்கான தீர்வினை பெற்று அதை விளம்பரப்படுத்துவதே இதன் நோக்கம் என்று சுற்றுச்சூழல் மையத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் மலிந்த சக்தி தெரிவித்தார்.

டிட்;வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறையை ஆராயும் நோக்கத்துடன் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகைகள் தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.

குறிப்பாக டிட்வா சூறாவளியின் பின்னர் இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றவும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை முறையான முகாமைத்துவத்துடன் அந்த மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே சூழலியல் மத்திய நிலையத்தின் உறுப்பினர்களின் எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது.

அத்துடன் அரசாங்கம் தொடர்ந்து எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் பொது மக்களிடம் கேட்டறியப்பட்டது.

அத்துடன் குறித்த பகுதிக்கு வருகைத்தந்த பொதுமக்களின் கையெழுத்துப் பெறும் வேலைத்திட்டமொன்றும்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *