அமெரிக்க விமானம் ஈராக் வான்பரப்பில் வீழ்ந்தது!

அமெரிக்க விமானப்படை KC-135 ஸ்ட்ராடோடேங்கர், மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க மத்திய கட்டளை நிலையம் அறிவித்துள்ளது.

“ஒபரேஷன் எபிக் ஃப்யூரியின் போது நட்பு வான்வெளியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று CENTCOM ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

“வானில் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இரண்டு விமானங்கள் சேவையில் ஈடுபட்டன. ஒரு விமானம் மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானது.இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், நிலைமை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பாக தரையிறங்கிய இரண்டாவது விமானமும் KC-135 என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *