அமெரிக்க விமானம் ஈராக் வான்பரப்பில் வீழ்ந்தது!

அமெரிக்க விமானப்படை KC-135 ஸ்ட்ராடோடேங்கர், மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க மத்திய கட்டளை நிலையம் அறிவித்துள்ளது. “ஒபரேஷன் எபிக் ஃப்யூரியின் போது நட்பு வான்வெளியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று CENTCOM ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  “வானில் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இரண்டு விமானங்கள் சேவையில் ஈடுபட்டன. ஒரு விமானம் மேற்கு ஈராக்கில் விபத்துக்குள்ளானது.இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது…

Read More

அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈரான் போர்க் கப்​பலை, அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் தாக்​கியதற்கு பதிலடி​யாக, வளை​குடா பகு​தி​யில் அமெரிக்க எண்​ணெய் கப்​பல் மீது ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​ய​தாக ஈரான் கூறி​யுள்​ளது. ஈரான் கடற்படையின் 17 போர் கப்​பலை அழித்​து​விட்​ட​தாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்​தி​யா​வில் கூட்​டுப் பயிற்​சியை முடித்து விட்டு ஈரான் திரும்​பிய ஐஆர்​ஐஎஸ் டேனா என்ற போர்க்​கப்​பலை, இந்​தி​யப் பெருங்​கடல் பகு​தி​யில் அமெரிக்க கடற்​படை​யின் நீர்​மூழ்கி கப்​பல் மார்க்​-48 என்ற சக்​தி​வாய்ந்த டார்​பிடோ குண்டு மூலம் நேற்று முன்​தினம் தகர்த்​தது. இதில்…

Read More

ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி

ரஷ்யாவிடமிருந்து இந்தியா 30 நாள்களுக்கு மசகு எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த போரால் உலகளவில் மசகு எண்ணெய் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் தட்டுப்பாட்டைக் குறைக்கும்வகையில் ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அதுவும் அடுத்த 30 நாள்கள் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய்…

Read More

ஈரானின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய கத்தார்! ட்ரோன்களை இடைமறித்ததாக அறிவிப்பு

ஈரானின் இரண்டு சுகோய்-24 ரக போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் ஈரான் ஏவிய 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 5 ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக கத்தார் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்கள் மற்றும் ஈரானிய பழிவாங்கல் ஆகியவற்றின் விளைவுகள் மத்திய கிழக்கு முழுவதும் பெரும் போர் பதற்றத்தினை அதிகரித்துள்ளது.  இந்நிவையில், கத்தார் விமானப்படை இரண்டு SU-24 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், ஈரானால் ஏவப்பட்ட ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகள்…

Read More