களுத்துறை பணிமனை அருகில் வலம்புரி சங்குடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (08) பகல் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய சோதனையிலேயே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்த வலம்புரியை ரூபா 35இலட்சத்துக்கு விற்பனை செய்யத் தயாராக இருந்தமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சந்தேக நபர் தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதோடு, வலம்புரி சங்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குருநாகலையைச் சேர்ந்த 51 வயதான நபரே இவ்வாறு கைதாகியுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

