அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈரான் போர்க் கப்​பலை, அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் தாக்​கியதற்கு பதிலடி​யாக, வளை​குடா பகு​தி​யில் அமெரிக்க எண்​ணெய் கப்​பல் மீது ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​ய​தாக ஈரான் கூறி​யுள்​ளது. ஈரான் கடற்படையின் 17 போர் கப்​பலை அழித்​து​விட்​ட​தாக அமெரிக்கா கூறியுள்ளது.

இந்​தி​யா​வில் கூட்​டுப் பயிற்​சியை முடித்து விட்டு ஈரான் திரும்​பிய ஐஆர்​ஐஎஸ் டேனா என்ற போர்க்​கப்​பலை, இந்​தி​யப் பெருங்​கடல் பகு​தி​யில் அமெரிக்க கடற்​படை​யின் நீர்​மூழ்கி கப்​பல் மார்க்​-48 என்ற சக்​தி​வாய்ந்த டார்​பிடோ குண்டு மூலம் நேற்று முன்​தினம் தகர்த்​தது. இதில் 87 வீரர்​கள் உயி​ரிழந்​தனர். 32 வீரர்​களை இலங்கை கடற்​படை மீட்​டுள்ளது. மாய​மான 60க்​கும் மேற்​பட்​டோரை தேடும் பணி​யில் இலங்கை அரசு ஈடுபட்டுள்​ளது.

“ஈரான் கடல் பகு​தி​யில் இருந்து 2,000 மைல்​களுக்கு அப்​பால் ஈரான் கப்​பல் மீது தாக்​குதல் நடத்தி அமெரிக்கா அராஜகத்​தில் ஈடு​பட்​டுள்​ளது. இந்​திய கடற்​படை நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​று​விட்டு திரும்​பிய டேனா போர்க்​கப்​பல் மீது எச்​சரிக்கை எது​வும் விடுக்​கப்​ப​டா​மல் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. இதற்​காக அமெரிக்கா மிகுந்த வருத்​தம் அடை​யும்” என ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்​சி கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *