தஜிகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிச்டர் அளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
135 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 37.35 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.98 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில், தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 12.07 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.
தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

