வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவி – இத்தாலி பிரதமர்

வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகளை வழங்கவுள்ளதாக, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கொமெய்னி, முக்கிய அதிகாரிகள் உள்பட 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேல் ஆகிய பகுதிகளின் மீது ஈரான் படைகள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால், மத்திய கிழக்கில் உள்ள வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இந்த நிலையில், வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகளை வழங்குவதாக, இன்று (05) இத்தாலி நாட்டின் பிரதமர் மெலோனி அறிவித்துள்ளார்.

“பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியைப் போன்று வளைகுடா நாடுகளுக்கு உதவிகளை வழங்க இத்தாலி முன்வருகின்றது. நாங்கள் வான் பாதுகாப்பு உதவிகளைப் பற்றி கூறுகின்றோம்.

அவர்கள் நம் நட்பு நாடுகள் என்பதற்காக மட்டுமல்ல, அப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான இத்தாலியர்கள் வசிக்கின்றனர். அங்குள்ள சுமார் 2,000 வீரர்களை நாம் பாதுகாக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *