இலங்கை மத்திய வங்கி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தவணைகள் மற்றும் வட்டி விகிதங்களை 2028 முதல் செலுத்த இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் அவற்றை எந்த தடையும் இல்லாமல் திருப்பிச் செலுத்துவதற்கு உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.

2028 முதல் இலங்கை ஆண்டுதோறும் மூன்றரை முதல் நான்கு (3.5) பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கடன்கள் மற்றும் தவணைகளை செலுத்த வேண்டியுள்ளது.

2028 முதல் 2031 வரை மற்றும் அதற்குப் பிறகும் எந்தத் தடையும் அல்லது தயக்கமும் இல்லாமல் இலங்கை தனது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏற்கனவே அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கட்டாய வருடாந்திர கடன் தவணைகள் மற்றும் வட்டிக்காக இலங்கை ஏற்கனவே 2025 இல் நான்கு (4) பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை எதிர்காலத்தில் ஐந்து சதவீதத்திற்கும் அதிகமான (5.0%) பொருளாதார வளர்ச்சியை அடையும் என்றும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார செயல்முறை நன்றாக இருக்கும் என்றும், எந்தத் தடையும் இல்லாமல் கடன்களை அடைக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை ஆதரிப்பது அனைவரின் பொறுப்பு என்றும் அவர் விளக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *