மத்திய கிழக்கு மோதல்கள் – புதிய நிலைவரம்

* ஈரானின் ஆன்மீக தலைவர் அலி கொமெய்னி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற மதிப்பீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

* ⁠அரபு நாடுகள் மீதான ஈரானிய தாக்குதல்களை பாலஸ்தீனம் கண்டித்துள்ளது.

* ஈரான் தனது நாட்டை நியாயமின்றி தாக்கியதாக ⁠ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் கருத்து .

* ⁠ஈரானிய அரசு ஊடகங்களின்படி, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் 201 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

* வளைகுடா நாடுகள் மீதான ஈரானிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் ‘ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் அறிவிப்பு .

* நாட்டின் ஆட்சியை மாற்ற முயற்சிப்பது ‘சாத்தியமற்ற பணி’ என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் கருத்து

*ஈரானின் உச்ச தலைவர் அலி கொமைனியின் மருமகனும் மருமகளும் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக தெஹ்ரான் நகர சபை தகவல்.

* ஈரானிய ஆன்மீக தலைவர் கொமெய்னி உயிருடன் இருப்பதாகவும், அவர் தனது அதிகாரத்தில் இருப்பதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

*அவசர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு சீனாவும் ரஷ்யாவும் அழைப்பு விடுத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *