உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் (G.C.E A/L) செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தொழில்நுட்பவியல் பாடங்கள்

பொறிமுறைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைத் துறையைச் சார்ந்த பின்வரும் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் மார்ச் 09 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன:

நாட்டியம் (தேசிய மற்றும் பரதம்)

சங்கீதம் (கீழைத்தேய மற்றும் மேலைத்தேய)

நாடகமும் அரங்கியலும் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்)

இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் விரிவாகக் காணலாம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *