மரணம், நெருப்பு ஈரான் மீது ஆட்சி செய்யும் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேவேளை ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. 

இந்நிலையில் ஹோர்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை சீர்குலைப்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு மற்றுமொரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஹோர்மூஸ் ஜலசந்தியில் எண்ணெய் போக்குவரத்தை தடுக்கும் வகையில் ஈரான் எதையும் செய்தால், அவர்கள் இதுவரை தாக்கப்பட்டதைப் பார்க்கிலும் இருபது மடங்கு அதிகமாக அமெரிக்காவால் தாக்கப்படுவார்கள் என ட்ரம்ப் கூறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உலகின் சுமார் 20% எண்ணெய் இந்த ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.

மீண்டும் ஈரான் ஒரு தேசமாக கட்டியெழுப்பப்படுவதை சாத்தியமற்றதாக்குவோம். மரணம், நெருப்பு, சீற்றம் அவர்கள் மீது ஆட்சி செய்யும். ஆனால், அது நடக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறேன், பிரார்த்திக்கிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *