நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என…

Read More

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில், உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்கள் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள தேவாலயங்களையும், ஐந்து நட்சத்திர விருந்தகங்களையும் குறிவைத்து நடத்தப்பட்டன. ஆறு முக்கிய இடங்களில் நிகழ்ந்த இந்த வெடிப்புகளில் சுமார் 269 பேர் உயிரிழந்தனர். 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் . நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மாத்திரம் நூற்றுக்கும்…

Read More

10 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட ஈராக் – சிரியா எல்லை

ஒரு தசாப்தத்திற்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, ஈராக் மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையிலான பிரதான எல்லைக் கதவுகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இது மத்திய கிழக்கின் வர்த்தக மற்றும் எரிசக்தி போக்குவரத்தில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஈரான் தொடர்பான போர் பதற்றங்களால் தற்போது மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ள ஹோர்முஸ் நீரினைக்கு மாற்றாக இந்த நிலவழிப் பாதையைப் பயன்படுத்த முடியும் என இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. கடல்வழிப் போக்குவரத்தில் சிக்கல்கள் ஏற்படும் போது, இந்த எல்லைப் பாதை…

Read More

குறிகட்டுவானின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணி நாளை மறுதினம் ஆரம்பம்

குறிகட்டுவான் இறங்கு துறையின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை காலை 09மணிக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது இவ் புனரமைப்பிற்காக 984.73 மில்லியன் ரூபா செலவிடப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் இவ் இறங்குதுறை புதிய தோற்றத்துடன் பல தசாப்தங்களின் பின் மீள நிர்மானிக்கப்பட உள்ளது.  கடந்த ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி இறங்குதுறைக்கான முதலாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ,…

Read More

யாழ்.பல்கலையில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்

தியாகத்தாய் அன்னை பூபதியின்  38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.  பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் , ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். 

Read More

யாழில்.அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்

தியாகத்தாய் அன்னை பூபதியின்  38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அன்னை பூபதி அம்மாவின் பேத்தி கலந்து கொண்டு ஈகைச்சுடரை ஏற்றி மலர் மாலை அணிவித்து வணக்கத்தை செலுத்தினார்.  தொடர்ந்து , நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டோர் மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

Read More

கடந்த 08 நாட்களில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

புத்தாண்டு காலத்தில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் சுமார் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.  குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.  அதேவேளை, நீரில் மூழ்கிய சம்பவங்களினால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.  அதிகளவிலான விபத்து மரணங்கள் ஏப்ரல் 10 மற்றும் 13 ஆகிய…

Read More

யாழ்ப்பாண மாணவன் பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்  சுன்னாகம் பகுதியை சேர்ந்த மொரட்டுவா பல்கலைக்கழக மாணவன் , சக மாணவர்களுடன் , பெந்தோட்டை பகுதிக்கு சுற்றுலா சென்று கடலில் நீராடிய வேளை கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்  கடலில் மூழ்கி காணாமல் போன மாணவனை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற போதிலும் , மாணவன் உயிரிழந்த நிலையில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.  சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது 

Read More

இந்திய துணை ஜனாதிபதியை சந்தித்த தமிழ்க் கட்சிகள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள்  பங்கேற்றுள்ளனர்.  அதேநேரம் மலையக தமிழ்க் கட்சிகளின் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். …

Read More

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவுக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் சில இடங்களில்…

Read More