ஈரான் கப்பல் மீதான தாக்குதல் – வெளியான அறிவிப்பு

ஈரானின் போர்க்கப்பலான ஐஆர்ஐஎஸ் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 104 பேர் உயிரிழந்துள்ளதோடு, 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 04ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைலுக்கு அப்பால் இக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 

குறித்த கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்த்தனர்.

அவர்களுள் 10 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் மீதான பிரேத பரிசோதனைகள் அண்மையில் காலி தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்டன.

ஈரான் கடற்படையினரில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *