இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசூர்ய விலகிய நிலையில், இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் இங்கிலாந்து முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஜொனதன் ட்ரொட் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இந்த நியமனம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யவில்லை.

சனத் ஜெயசூர்யவின் ஒப்பந்தம் எதிர்வரும் ஜூன் மாதமே காலாவதியாகவுள்ளது. இது தொடர்பில் ஜயசூர்ய மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை இடையே விரையில் பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆப்கான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த 44 வயது ட்ரோட், இம்முறை டி20 உலகக் கிண்ணத்துடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஆப்கான் கிரிக்கெட் சபையினால் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாகவே அவரது ஒப்பந்தம் காலாவதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *