தமது ஆதரவின்றி தெரிவாகும் தலைவர் நீண்ட காலம் உயிருடன் இருக்கப்போவதில்லை – ட்ரம்ப்

ஈரான் மீதான தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருவரும் கலந்துரையாடி வருகின்றோம். சரியான நேரத்தில் நான் ஒரு தீர்மானத்தை எடுப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஈரானின் புதிய அதி உயர் தலைவரான மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் தமது ஆதரவின்றி தெரிவு செய்யப்படும் தலைவர் அதிக காலம் உயிருடன் இருக்கப் போவதில்லை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியிலேயே ட்ரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *