ஈரானிய போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதன் பின்னணியில் அவுஸ்திரேலிய கடற்படையினரின் பங்களிப்பு குறித்து விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கை, காலியிலிருந்து சற்று தொலைவிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்ற அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் அவுஸ்திரேலிய கடற்படையினர் மூவர் இருந்ததாக சென்றவாரம் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தனி அல்போன்ஸி தெரிவித்திருந்தார்.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் சர்லொத் இலங்கைக்கு அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் வைத்து ஈரானிய போர்க் கப்பலை தாக்கி மூழ்கடித்தது.
இத்தாக்குதலில் குறைந்தது 87 ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரானிய போர்க் கப்பலான Iris Dena கப்பலில் உயிருடன் இருந்த ஈரானியர்கள் சிலரை இலங்கை கடற்படை காப்பாற்றியது.
இத்தாக்குதலில் மூன்று அவுஸ்திரேலிய கடற்படையினரின் பங்களிப்புப் பற்றிய உண்மை விளக்கத்தை சர்வதேச ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
அதாவது, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க் கப்பலை அடையாளம் கண்டதும் தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னர் அவுஸ்திரேலியரான அம்மூவரையும் தங்களது ஓய்வறைக்கு செல்லுமாறு கெப்டனால் உத்தரவிடப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலிய வீரர்கள் ஈரானுக்கு எதிரான தாக்குதலில் பங்கேற்கவில்லை என தன்னால் உறுதிப்படுத்த முடியுமென அவுஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பான்ஸி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க – அவுஸ்திரேலிய கூட்டுப் பயிற்சி திட்டம் நீண்ட நாட்களாகவும் பல வருடங்களாகவும் மூன்றாவது நாட்டிலிருந்து இடம்பெற்று வருகின்றமை வழமை என அவுஸ்திரேலியப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க – அவுஸ்திரேலிய கூட்டுத்திட்டத்தை விமர்சிப்பதில் முக்கியமான பங்கு வகிக்கும் அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியானது அவுஸ்திரேலிய பிரதமரின் முழுப் பொய்யென இத்தாக்குதல் பற்றி தெரிவித்துள்ளது.
அமெரிக்க – அவுஸ்திரேலிய கூட்டுப் பயிற்சி திட்டம் 1999 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் இலங்கை சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய போர்க் கப்பலை இலக்கு வைத்து தாக்கியபோது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்த மூன்று அவுஸ்திரேலிய கடற்படை வீரர்களும் தங்களது ஓய்வறையில் இருந்தார்கள் என்பது தற்போது சர்வதேச பேசுபொருளாக மாறியுள்ளது.
அதேவேளை, பிரிட்டனுக்கு சொந்தமான அணுவாயுத வல்லமையுடைய நீர்மூழ்கிக் கப்பல் கடந்த மாதம் மேற்கு அவுஸ்திரேலிய எச்.எம்.ஏ.எஸ்.டேர்லிங் கடற்படை தளத்தை வந்தடைந்ததாகவும் அது எங்குச் சென்றுள்ளது என்பது இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் சவூதி அரேபியாவின் எண்ணெய் வளம் மிக்க கிழக்குப் பகுதியில் இரண்டு ட்ரோன்களை அழித்ததாகவும் குவைத்தின் இராணுவம் ஆறு ஈரான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் கூறியது.
இதுகுறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஈரானில் இருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வான் பாதுகாப்பு தற்போது பதிலளித்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
தொடரும் எனவும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கொமெய்னி உட்பட 1,300க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

