எத்தியோப்பியாவில் மண்சரிவு – 50 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியா நாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவின் காமோ பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் அங்குள்ள காச்சோ பாபா, கம்பா மற்றும் போன்கே ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், அங்குள்ள ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒருவர் மட்டுமே மண்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், இந்த மண்சரிவுகளில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 125 பேர் மாயமாகியுள்ளதாகவும் நேற்று (12) உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடந்து, 3 மாவட்டங்களின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாயமானவர்களைத் தேடும் பணிகளில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *