QR பிரச்சினைகளை தீர்க்க புதிய உதவிச் சேவை

தேசிய எரிபொருள் அனுமதி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உடனடி உதவிச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கட்டமைப்பில் பதிவு செய்யும்போது அல்லது அதைப் பயன்படுத்தும்போது வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்பச் சிக்கல்களையும் தடைகளையும் விரைவாகத் தீர்ப்பதே இதன் நோக்கமாகும்.

இதன்படி, வாகனப் பதிவின்போது ஏற்படும் எந்தவொரு சிக்கல்களுக்கும் உதவி பெற, 076 019 1919 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை ஊடாக தேசிய எரிபொருள் அனுமதி கட்டமைப்பை பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதலையும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்குவது மாத்திரமின்றி மோசடி நடவடிக்கைகள் அல்லது கட்டமைப்பை தவறாகப் பயன்படுத்துபவர்கள் தொடர்பிரல் முறைப்பாடும் செய்யலாம் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *