தெஹ்ரான் முழுவதும் பாரிய வெடிப்பு சத்தங்கள்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்கொண்டபோது இந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.

தெஹ்ரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகளை ஈரானிய பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்து வருகின்றன.

இதனால் நகரின் பல பகுதிகளில் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் பாயும் சத்தமும், வெடிப்புகளும் பதிவாகி வருகின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது நடத்தி வரும் போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.

நள்ளிரவைத் தாண்டிய வேளையில் நிகழ்ந்து வரும் இந்தத் தொடர் வெடிப்புகளால் தெஹ்ரான் மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.

பலர் நிலத்தடி பாதுகாப்பு அரண்களை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *