ஈராக் நகரமான எர்பிலில் உள்ள இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட் அலுவலகத்தை குறி வைத்து இன்று (23) அதிகாலை ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
ஈரான் ஆதரவுக் குழுவான அஷாப் அல் – கஹ்ஃப் இத் தாக்குதலை உறுதி செய்துள்ளது.
மேலும் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களிலிருந்து பொதுமக்களை விலகி இருக்குமாறும் அவ் அமைப்பு எச்சரித்துள்ளது.
இத் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பிலான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

