பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி அநுரவுக்கிடையே தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல், குறிப்பாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பைப் பாதிக்கும் இடையூறுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்திய – இலங்கை எரிசக்தி ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொதுவான சவால்களில் இணைந்து செயல்படுதல் ஆகியவை குறித்து இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் விவாதித்ததாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *